கிரிக்கெட் (Cricket)

2வது டி20 போட்டியில் டக் அவுட்... தொடர்ந்து சொதப்பும் சுப்மன் கில்

Published On 2025-12-11 21:17 IST   |   Update On 2025-12-11 21:17:00 IST
  • முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து துணை கேப்டன் சுப்மன் கில் கோல்டன் டக் அவுட்டானார்.
  • கடந்த போட்டியில் துணை கேப்டன் சுப்மன் கில் 4 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2 ஆவது டி20 போட்டி முல்லன்பூரில் நடைபெற்று வருகிறது . இதில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து இந்திய அணி 214 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடி வருகிறது. இப்போட்டியில் தான் சந்தித்த முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து துணை கேப்டன் சுப்மன் கில் கோல்டன் டக் அவுட்டானார்.

முன்னதாக கடந்த போட்டியில் துணை கேப்டன் சுப்மன் கில் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். சுப்மன் கில் கடைசியாக விளையாடிய 15 போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. இதில் 3 முறை மட்டும் 30 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். கடைசியா விளையாடிய 13 20(9), 10(7), 5(8), 47(28), 29(19), 4(3), 12(10), 37*(20), 5(10), 15(12), 46(40), 29(16), 4(2).

ஆனால் சஞ்சு சாம்சன் தொடக்க வீரராக கடைசி 10 போட்டியில் 3 சதம் விளாசியுள்ளார். இந்நிலையில் தொடர்ந்து இரு சதம் விளாசி அணியின் தொடக்க வீரராக நிரந்தர இடம் பிடித்த சஞ்சு சாம்சனை நீக்கி கில்லை தொடக்க வீரராக களமிறங்கினர். ஆனால் கில் பெரிய அளவில் சாதிக்கவில்லை. சஞ்சுவின் தொடக்க வீரர் இடத்தையும் பரித்துவிட்டு பின் வரிசையில் இறக்கி அவரது நம்பிக்கையை இழக்கும் வண்ணம் செய்தனர். அதனை தொடர்ந்து அணியில் இருந்தே சஞ்சு சாம்சனை தூக்கினர்.

தொடர்ந்து தொடர்ந்து சொதப்பும் கில்லுக்கு பதிலாக சஞ்சு சாம்சனை அணிக்கு கொண்டு வரவேண்டும் என்று ரசிகர்கள் காட்டமாக பதிவிட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News