விளையாட்டு

மகளிர் பிரீமியர் லீக்: 3-வது வெற்றி ஆர்வத்தில் பெங்களூரு அணி குஜராத்துடன் மோதல்

Published On 2025-02-27 10:52 IST   |   Update On 2025-02-27 10:52:00 IST
  • பெங்களூரு அணி 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது.
  • குஜராத் அணி 1 வெற்றி, 3 தோல்வியுடன் 2 புள்ளி கள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது.

3-வது மகளிர் பிரீமியர் 'லீக்' 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 2-வது கட்ட ஆட்டங்கள் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது.

5 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.

12-வது லீக் ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ் சர்ஸ் பெங்களூரு-குஜராத் ஜெயின்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

பெங்களூரு அணி 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது.

அந்த அணி குஜராத்தை மீண்டும் வீழ்த்தி 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது. பெங்களூரு அணி தொடக்க ஆட்டத்தில் குஜராத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து இருந்தது.

குஜராத் அணி 1 வெற்றி, 3 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணி பெங்களூருவுக்கு பதிலடி கொடுத்து 2-வது வெற்றியை பெறும் வேட்கையுடன் உள்ளது.

முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் தலா 6 புள்ளிகளுடன் முதல் 2 இடங்களில் உள்ளன. உ.பி.வாரியர்ஸ் 4 புள்ளியுடன் 4-வது இடத்தில் இருக்கிறது.

Tags:    

Similar News