விளையாட்டு
இந்திய அணி வீரர்கள்

2-வது ஒருநாள் கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சு தேர்வு

Published On 2022-02-09 13:17 IST   |   Update On 2022-02-09 13:17:00 IST
இந்திய அணியில் கே.எல். ராகுல் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியில் பொல்லார்டு இடம் பெறவில்லை.
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகளும் அகமதாபாத்தில் உள்ள மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில் 2-வது போட்டி 1.30 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் பொல்லார்டு இடம் பெறவில்லை. இதனால் நிக்கோலஸ் பூரன் கேப்டனாக செயல்படுகிறார். அவர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இந்திய அணியில் தொடக்க வீரர் இஷான் கிஷன் நீக்கப்பட்டு கே.எல். ராகுல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Similar News