விளையாட்டு
கிறிஸ் கெய்ன்ஸ்

நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெய்ன்ஸ் புற்றுநோயால் பாதிப்பு

Published On 2022-02-06 09:36 IST   |   Update On 2022-02-06 09:36:00 IST
வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெய்ன்ஸ்க்கு குடலில் புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
கான்பெர்ரா:

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரான கிறிஸ் கெய்ன்ஸ் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். 5 மாதத்துக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவருக்கு பக்கவாதத்தால் கால்கள் செயல் இழந்தன. இதற்காக ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்ற 51 வயதான கிறிஸ் கெய்ன்ஸ் கடந்த வாரம் வீடு திரும்பினார். 

இந்த நிலையில் வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட கெய்ன்ஸ்க்கு குடலில் புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இந்த தகவலை கெய்ன்ஸ் இன்ஸ்டாகிராம் மூலம் தெரிவித்துள்ளார். அதில் ‘அடுத்தகட்ட போராட்டத்தை எதிர்நோக்கி இருப்பதாகவும், இந்த பிரச்சினை விரைவில் தீர்ந்து விடும் என நம்புகிறேன்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Similar News