செய்திகள்
மந்தனா

ஆஸ்திரேலியா மண்ணில் சாதனை படைத்த மந்தனா

Published On 2021-10-01 07:29 GMT   |   Update On 2021-10-01 07:29 GMT
இந்தியா-ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் மோதும் பகல் இரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் மந்தனா சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

ஓவல்:

இந்தியா-ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் மோதும் ஒரே ஒரு பகல் இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கரரா ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்தியாவின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. தொடக்க வீராங்கனை ‌ஷபாலி வர்மா 31 ரன்னில் அவுட் ஆனார். இந்திய அணி 44.1 ஓவரில் 132 ரன் எடுத்திருந்த போது மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் அத்துடன் முடித்துக் கொள்ளப்பட்டது. அப்போது மந்தனா 80 ரன்னுடனும் பூனம் ரவுத் 16 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மந்தனா டெஸ்டில் தனது முதல் சதத்தை அடித்தார். ஆஸ்திரேலிய மண்ணில் சதம் அடித்த முதல் இந்திய வீரங்கனை என்ற சாதனையையும் அவர் பெற்றார். அவர் 170 பந்தில் 100 ரன்னை தொட்டார். இதில் 18 பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். அதன்பின் மந்தனா 127 ரன்னிலும், புனம் ரவுத் 36 ரன்னிலும் அவுட் ஆனார்கள். இந்திய அணி 81 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 224 ரன் எடுத்திருந்தது.

Tags:    

Similar News