செய்திகள்
எம்.எஸ். டோனி, அம்பதி ராயுடு

9 வெற்றிகளுடன் அதிகாரப்பூர்வமாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்

Published On 2021-10-01 00:02 IST   |   Update On 2021-10-01 00:02:00 IST
11 போட்டிகளில் இரண்டில் மட்டுமே தோல்வியை தழுவிய நிலையில் 9 வெற்றிகளுடன் அதிகாரப்பூர்வமாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த சீசனில் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. இந்த முறை சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்ற துடிப்புடன் விளையாடியது சென்னை சூப்பர் கிங்ஸ். அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தியதன் மூலம் 11 போட்டிகளில் 9-ல் வெற்றி பெற்று அதிகாரப்பூர்வமாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடமும், 7-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியிடமும் தோல்வியை சந்தித்திருந்தது. இந்த சீசனில் தொடர்ந்து ஐந்து முறையும், தொடர்ந்து நான்கு முறையும் வெற்றி பெற்றுள்ளது.

Similar News