செய்திகள்
குல்தீப் யாதவுக்கு காலில் ‘ஆபரேஷன்’
முழுமையாக குணமடைந்து மிக விரைவில் களம் திரும்ப விரும்புகிறேன் என்று குல்தீப் யாதவ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மும்பை:
ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பிடித்திருந்த இந்திய இடக்கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், பயிற்சியின்போது வலது கால்முட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகினார்.
இந்த நிலையில் கால்முட்டி காயத்தை சரிசெய்ய அவருக்கு நேற்று ஆபரேஷன் செய்யப்பட்டது. ‘ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்தது. காயத்தில் இருந்து மீள்வதற்கான மருத்துவம் மற்றும் பயிற்சி நடைமுறைகள் தொடங்கியுள்ளன.
இந்த சமயத்தில் எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி. முழுமையாக குணமடைந்து மிக விரைவில் களம் திரும்ப விரும்புகிறேன்’ என்று குல்தீப் யாதவ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.