செய்திகள்
பென் ஸ்டோக்ஸ் - குல்தீப் யாதவ்

ஒரு ஆட்டத்தில் அதிக சிக்சர் - அடித்ததில் பென் ஸ்டோக்ஸ்சும், கொடுத்ததில் குல்தீப்பும் 3-வது இடம்

Published On 2021-03-27 07:32 GMT   |   Update On 2021-03-27 07:32 GMT
இந்தியாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 10 சிக்சர் அடித்ததன் மூலம் ஒரு ஆட்டத்தில் அதிக சிக்சர் அடித்த 3-வது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பென் ஸ்டோக்ஸ் பெற்றார்.

புனே:

இந்தியாவுக்கு எதிராக நேற்று நடந்த 2-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்சின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. அவர் 52 பந்தில் 4 பவுண்டரி, 10 சிக்சருடன் 99 ரன் எடுத்தார்.

இதன் மூலம் ஒரு ஆட்டத்தில் அதிக சிக்சர் அடித்த 3-வது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பென் ஸ்டோக்ஸ் பெற்றார். மார்கன் 17 சிக்சர்கள் அடித்து உலக சாதனை படைத்தார். 2019-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அவர் 148 ரன் குவித்தார். பட்லர் 2019-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 12 சிக்சர் அடித்தார்.

குல்தீப் யாதவ் ஓவரில் 8 சிக்சர்கள் விளாசப்பட்டன. இதன் மூலம் அதிக சிக்சர்களை விட்டுக் கொடுத்த 3-வது பவுலர் என்ற மோசமான நிலையை அவர் பெற்றார். ரஷீத்கான் 11 சிக்சர்களும், மொய்ன் அலி 9 சிக்சர்களும் விட்டுக் கொடுத்தனர்.

Tags:    

Similar News