செய்திகள்
மனைவி அனுஷ்கா சர்மா உடன் விராட் கோலி

அது சிறப்பான மற்றும் அழகான தருணமாக இருக்கும்: விராட் கோலி

Published On 2020-11-27 23:03 IST   |   Update On 2020-11-27 23:03:00 IST
எனது மனைவி குழந்தை பெற்றெடுக்கும்போது அருகில் இருப்பது அழகான மற்றும் சிறப்பான தருணம் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி. இவர் பாலிவுட் நடிகை அனுஷ்காவை திருமணம் செய்துள்ளார். தற்போது அனுஷ்கா சர்மா கர்ப்பிணியாக உள்ளார். இவர்களுக்கு முதல் குழந்தை ஜனவரியில் பிறக்க இருக்கிறது. இதனால் விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

விராட் கோலியின் முடிவுக்கு பலர் ஆதரவு தெரிவித்தாலும், ஆங்காங்கே சில விமர்சனங்களும் எழுகின்றன. இந்நிலையில் மூன்று போட்டிகளில் விலக நினைத்தது ஏன்? என பதில் அளித்தார். இதுகுறித்து விராட் கோலி அளித்த பதிலில் ‘‘எங்களுடைய முதல் குழந்தையை எனது மனைவி பெற்றெடுக்க இருப்பதால் நான் சொந்த நாடு திரும்ப விரும்பினேன். எனது வாழ்க்கையில் அது சிறப்பான மற்றும் அழகான தருணம்’’ என்றார்.

Similar News