செய்திகள்
இயன் பெல்

இங்கிலாந்து அணியின் இயன் பெல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

Published On 2020-09-06 19:49 IST   |   Update On 2020-09-06 19:49:00 IST
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக திகழ்ந்த இயன் பெல் தொழில்முறை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் இயன் பெல். 38 வயதாகும் இவர் இங்கிலாந்து அணிக்காக 118 டெஸ்ட், 161 ஒருநாள் மற்றும் 8 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

2004-ம் ஆண்டு முதல் 2015 வரை இங்கிலாந்து அணிக்காக விளையாடிய பெல் டெஸ்ட் போட்டியில் 7,725 ரன்களும், ஒருநாள் போட்டியில் 5,416 ரன்களும் அடித்தார். டெஸ்ட் போட்டியில் 22 சதங்களும் 46 அரைசதங்களும், ஒருநாள் போட்டியில் நான்கு சதங்களும், 35 அரைசதங்களும் அடித்துள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக இங்கிலாந்து அணியில் இடம் பிடிக்காத இயன் பெல் கவுன்ட்டி போட்டியிலும் மட்டும் விளையாடி வந்தார். இந்நிலையில் 38 வயதாகும் இயன் பெல் நேற்று கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

2013-ம் ஆண்டு ஆஷஸ் தொடரை இங்கிலாந்து கைப்பற்றியபோது தொடர் நாயகன் விருதை பெற்றார். 2012-ம் ஆண்டு இங்கிலாந்து அணி இந்திய மண்ணில் தொடரை வெல்லும்போது அணியில் ஒரு நபராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News