இன்றைய ராசிபலன் 31.1.2026: இவர்களுக்கு கல்யாண வாய்ப்புகள் கைகூடும்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
சொன்ன சொல்லை காப்பாற்றி மகிழும் நாள். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சகோதர சச்சரவுகள் அகலும்.
ரிஷபம்
கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாள். கடமையில் ஏற்பட்ட தொய்வு அகலும். வியாபார விருத்திக்காக பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.
மிதுனம்
எதிர்ப்புகளை முறியடித்து ஏற்றம் காண வேண்டிய நாள். உத்தியோகத்தில் இயந்திர பணியில் இருப்பவர்கள் விழிப்புணர்ச்சியுடன் செயல்படவும்.
கடகம்
நிர்வாகத் திறமை பளிச்சிடும் நாள். நீண்டநாளைய எண்ணம் நிறைவேறுவதற்கான அறிகுறி தோன்றும். புதிய வியாபாரம் லாபத்தைக் கொடுக்கும்.
சிம்மம்
வாகன யோகத்தால் வளம் காணும் நாள். வசதிகள் பெருகும். வருங்கால நலன் கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
கன்னி
தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். சகோதர வழியில் சுபச்செய்தி ஒன்று வந்து சேரலாம்.
துலாம்
காலை நேரத்திலேயே காதினிக்கும் செய்தி வந்து சேரும் நாள். கடமையிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். வருமானம் திருப்தி தரும்.
விருச்சிகம்
ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். அதிக விரயம் ஏற்படுகின்றதே என்று கவலைப்படுவீர்கள். தொழில் ரீதியாக குழப்பங்கள் தோன்றும்.
தனுசு
பொறுமையை கடைப்பிடிக்க வேண்டிய நாள். பொது நலத்தில் ஈடுபடும்பொழுது கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. திட்டமிட்ட பயணம் தாமதப்படும்.
மகரம்
வருமானம் உயரும் நாள். வாழ்க்கை தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள வள்ளல்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நண்பர்கள் நல்ல தகவலை தருவர்.
கும்பம்
விடியும் பொழுதில் வியப்பான செய்தி வந்து சேரும் நாள். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். பணம் பல வழிகளிலும் வந்து சேரலாம்.
மீனம்
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும் நாள். பிரபலஸ்தர்களின் சந்திப்பு உண்டு. உங்களின் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும்.