டென்னிஸ் வரலாற்றில் 33 ஆண்டுகால சாதனையை தகர்த்த அல்காரஸ்
- ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் அரையிறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது.
- இதில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் அரையிறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.
இந்நிலையில், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம் அல்காரஸ் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் அதிக நேரம் நடைபெற்ற அரையிறுதிப் போட்டிக்கு சொந்தக்காரர் என்ற சாதனை படைத்தார்.
இந்தத் தொடரின் இறுதிப்போட்டிக்கு நுழைந்ததன் மூலம் அனைத்து கிராண்ட்சிலாம் போட்டிகளின் இறுதிக்கு முன்னேறிய இளம் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
இதற்கு முன் 33 ஆண்டுக்கு முன் ஜிம் கொரியர் படைத்திருந்த சாதனையை அல்காரஸ் தகர்த்தார்.
அனைத்து கிராண்ட்சிலாம் போட்டிகளின் இறுதிக்குள் நுழைந்த இளம் வீரர் என கடந்த ஆண்டு சின்னர் படைத்த சாதனையையும் அல்காரஸ் முறியடித்துள்ளார்.