செய்திகள்

4-வது இடத்தில் களம் இறங்க போதுமான வீரர்கள் உள்ளனர்: தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி

Published On 2019-05-14 10:57 GMT   |   Update On 2019-05-14 10:57 GMT
உலகக்கோப்பைக்கான காம்பினேசன், 4-வது இடத்திற்கு யார்? உள்பட பல்வேறு சந்தேகங்களுக்கு தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விளக்கம் அளித்துள்ளார்.
உலகக்கோப்பை தொடர் குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி கூறுகையில் ‘‘இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் எந்த இடத்திலும் களம் இறங்கி விளையாடும் திறமை பெற்றவர்கள். நாங்கள் ஒரு பிளெக்சிபில் அணி. இந்தியா பந்ததையத்திற்கான குதிரை. பந்தயத்தில் வெல்வதற்கான போதுமான ஆயுதங்களை பெற்றுள்ளோம். நம்பர் 4-ல் களம் இறங்கி விளையாட போதுமான வீரர்களை பெற்றுள்ளோம். ஆகவே, நாங்கள் அதைப்பற்றி பெரிதாக கவலைப்படுவதில்லை.

நாங்கள் அனைத்து பகுதிகளிலும் (பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங்) ஆதிக்கம் செலுத்தும் வகையிலான அணியை பெற்றுள்ளோம். தொடருக்கு பயணம் செய்ய வேண்டும், தேர்வு செய்யப்பட்டுள்ள 15 பேரும் அதில் இருக்க வேண்டும் என்பதுதான் கடைசி கட்ட எண்ணமாக இருக்கிறது.



வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் மிகவும் மோசமான அளவிற்கு காயம் அடைந்தால், மாற்று வீரரை தேர்வு செய்ய தயாராக இருக்கிறோம்.

நாங்கள் 22-ந்தேதிதான் இங்கிலாந்து புறப்பட இருக்கிறோம். அதில் 15 பேரும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதிர்ஷ்டவசமாக கேதர் ஜாதவுக்கு எழும்பு முறிவு ஏற்படவில்லை. ஆகவே, பொறுத்திருந்து பார்க்க வேண்டும். போதுமான காலஅவகாசம் இருக்கிறது’’ என்றார்.
Tags:    

Similar News