செய்திகள்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் - பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 185 ரன்களில் ஆல் அவுட்

Published On 2019-01-12 14:08 GMT   |   Update On 2019-01-12 14:08 GMT
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 185 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. #SAvPAK
ஜோகனஸ்பர்க்:

தென்ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜோகனஸ்பெர்க்கில் நேற்று தொடங்கியது.

டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் ஆம்லா 41 ரன்னிலும், டி புருயின் 49 ரன்னிலும் அவுட்டானார். மார்கிராம் பொறுப்புடன் ஆடி 90 ரன்னில் வெளியேறினார்.

தேனீர் இடைவேளைக்கு பிறகு பாகிஸ்தான் வீரர்களின் துல்லியமான பந்து வீச்சில் சிக்கிய தென்ஆப்பிரிக்கா 77.4 ஓவரில் 262 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.


5 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஆலிவர்

பாகிஸ்தான் தரப்பில் பாஹிம் அஷ்ரப் 3 விக்கெட்டும், மொகமது அமீர், மொகமது அப்பாஸ் மற்றும் ஹசன் அலி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 

இதையடுத்து, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் 41 ரன்னிலும், பாபர் அசாம் 49 ரன்னிலும் அவுட்டாகினர். கேப்டன் சர்ப்ராஸ் அகமது அரை சதமடித்து அசத்தினார். அவர் 40 பந்தில் 50 ரன் எடுத்து வெளியேறினார். மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால் பாகிஸ்தான் அணி 49.4 ஓவரில் 185 ரன்களில் ஆல் அவுட்டானது.

தென்ஆப்பிரிக்கா சார்பில் டுயான் ஆலிவர் 5 விக்கெட்டும், பிலெண்டர் 3 விக்கெட்டும், ரபாடா 2 விக்கெட்டும் எடுத்தனர். #SAvPAK
Tags:    

Similar News