செய்திகள்

தோல்வியையே சந்திக்காமல் கோப்பை வென்று சாதித்த பிரான்ஸ்

Published On 2018-07-15 23:17 IST   |   Update On 2018-07-15 23:17:00 IST
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் குரோசியாவை வீழ்த்தியதன் மூலம் தோல்வியையே சந்திக்காமல் கோப்பை வென்ற அணி என்ற பெருமையை பெற்றுள்ளது பிரான்ஸ் அணி. #WorldCup2018 #FRACRO
உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் இன்றுடன் நிறைவடைகிறது. லீக், நாக் அவுட் சுற்றுகள், காலிறுதி மற்றும் அரையிறுதி ஆட்டங்கள் முடிந்து இறுதி ஆட்டம் நடந்தது.

இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கிய இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - குரோஷியா அணிகள் மோதின. இதில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோசியா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த முறை பிரான்ஸ் அணி தான் பங்கேற்ற லீக் போட்டிகளில் எந்த அணியிடமும் தோல்வி அடைந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், தான் பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது. #WorldCup2018 #FifaWorldCup2018 #FRACRO #CROFRA #FrancevCroatia
Tags:    

Similar News