செய்திகள்

உலகக் கோப்பையில் விளையாடுவதற்கே ரஷியா வந்துள்ளேன்- முகமது சாலா

Published On 2018-06-12 16:42 IST   |   Update On 2018-06-12 16:42:00 IST
உலகக் கோப்பையில் விளையாடுவதற்காகவே ரஷியா வந்துள்ளேன் என்று எகிப்து அணியின் முன்னணி வீரர் முகமது சாலா கூறியுள்ளார். #FIFA2018
எகிப்து கால்பந்து அணியின் முன்னணி வீரர் முகமது சாலா. இவர் லிவர்பூல் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 27-ந்தேதி நடைபெற்ற ரியல் மாட்ரிட் அணிக்கெதிரான யூரோ சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் சாலாவிற்கு காயம் ஏற்பட்டது.

இந்த காயத்திற்காக மூன்று வாரங்கள் முகமது சாலா ஓய்வு எடுக்க வேண்டியிருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவித்தனர். சனிக்கிழமை எகிப்து அணி ரஷியா சென்றடைந்தது. ரஷியா அணியுடன் முகமது சாலாவும் சென்றிருந்தார்.



நான் ரஷியா வந்ததே உலகக் கோப்பையில் விளையாடுவதற்கே என்று முகமது சாலா கூறியுள்ளார். இதுகுறித்து சாலா கூறுகையில் ‘‘காயம் ஏற்பட்டது துரதிருஷ்டவசமானது. நான் ரஷியா வந்ததே உலகக் கோப்பையில் விளையாடுவதற்காகத்தான்.

நாங்கள் உலகக் கோப்பையில் விளையாட தகுதி பெற்ற பின்னர், நான் அணியில் இடம்பெறாவிடில், உண்மையிலேயே கடினமாக இருக்கும். கடவுள் உலகக் கோப்பையில் நான் ஒரு பகுதியாக இருக்கும் வாய்ப்பை அளித்துள்ளார். கனவு நனவாகியுள்ளது’’ என்றார்.
Tags:    

Similar News