புதுச்சேரி
null

தெபேசான்பேட் பகுதியில் 26-ந் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்

Published On 2025-06-24 16:15 IST   |   Update On 2025-06-24 16:16:00 IST
  • விஸ்வநாதன் நகர் பகுதி மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது.
  • எம்.ஜி. ரோடு மேற்கு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடை செய்யப்படும்.

புதுச்சேரி:

புதுவை பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுவை குடிநீர் உட்கோட்டம், வடக்கு பிரிவுக்குட்பட்ட விஸ்வநாதன் நகர் பகுதி மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது.

இதனையொட்டி வருகிற 26-ந் தேதி (வியாழக்கிழமை) மதியம் 12 மணி முதல் 2 மணி வரை மாணிக்க முதலியார்தோட்டம், தெபேசான்பேட், விஸ்வநாதன் நகர், லூர்து நகர், எம்.ஜி. ரோடு மேற்கு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடை செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News