புதுச்சேரி

புதுவையில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும்- கல்வித்துறை உத்தரவு

Published On 2024-12-06 08:42 IST   |   Update On 2024-12-06 08:42:00 IST
  • ஃபெஞ்சல்' புயல் காரணமாக புதுவையில் 48.4 செ.மீ., காரைக்காலில் 16.9 செ.மீ. மழை கொட்டியது.
  • கடந்த நவம்பர் 27, 28, 29 தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

'ஃபெஞ்சல்' புயல் காரணமாக கடந்த 30-ந்தேதி மற்றும் 1-ந்தேதி அன்று கனமழை பெய்தது. அன்று ஒரே நாளில் மட்டும் புதுவையில் 48.4 செ.மீ., காரைக்காலில் 16.9 செ.மீ. மழை கொட்டியது. தொடர்ந்து சாத்தனூர் மற்றும் வீடூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட 2 லட்சத்து 12 ஆயிரம் கனஅடி தண்ணீரால் தென்பெண்ணை ஆறு மற்றும் அதன் கிளை ஆறான மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் டி.என்.பாளையம், அபிஷேகப்பாக்கம், கிருமாம்பாக்கத்தின் ஒரு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆற்றங்கரையோரம் வசித்த பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதனால் கடந்த நவம்பர் 27, 28, 29 தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் புதுச்சேரியில் புயல்-வெள்ள பாதிப்புகளுக்கு விடுக்கப்பட்ட விடுமுறைகளை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

நவம்பர் 27, 28, 29 தேதி விடுமுறையை ஈடுசெய்ய வரும் டிசம்பர் 7, 14, 21-ந்தேதி சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News