புதுச்சேரி

பராமரிப்பு பணி: புதுச்சேரி-விழுப்புரம் ரெயில் சேவை ரத்து

Published On 2025-06-05 09:00 IST   |   Update On 2025-06-05 09:00:00 IST
  • சில ரெயில்கள் முழுவதுமாகவும், சில பகுதியளவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
  • புதுவையிலிருந்து விழுப்புரத்துக்கு காலை இயக்கப்படும் மெமு ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

புதுச்சேரி:

தென்னக ரெயில்வேயின் திருச்சி கோட்டத்துக்குட்பட்ட ரெயில்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சில ரெயில்கள் முழுவதுமாகவும், சில பகுதியளவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதன்படி விழுப்புரத்திலிருந்து காலை 5.25 மணிக்கு புதுச்சேரிக்கு இயக்கப்படும் (வண்டி எண் 66063) மெமு ரெயிலும், புதுவையிலிருந்து விழுப்புரத்துக்கு காலை 8.05 மணிக்கு இயக்கப்படும் (வண்டி எண் 66064) மெமு ரெயிலும் இன்று (வியாழக்கிழமை), நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாள் (சனிக்கிழமை) மற்றும் வருகிற 9-ந்தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

சென்னை எழும்பூரிலிருந்து காலை 6.35 மணிக்கு புதுவைக்கு இயக்கப்படும் ரெயில் (வண்டி எண் 66051) வசதியான இடத்தில் வருகிற 8 மற்றும் 10-ந்தேதிகளில் ஒரு மணிநேரம் நிறுத்தி வைக்கப்படும். அதேபோல் புதுவை-திருப்பதி ரெயிலும் (வண்டி எண் 16112) வருகிற 11, 12-ந்தேதிகளில் 25 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும்.

புதுச்சேரி-அவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 12868) வருகிற 11 மற்றும் 18-ந் தேதிகளில் பிற்பகல் 2.15 மணிக்கு பதிலாக 3.05 மணிக்கு (50 நிமிடம் தாமதமாக) புறப்படும்.

மேற்கண்ட தகவலை திருச்சி ரெயில்வே கோட்டம் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News