இந்தியா

அருவியை படம்பிடித்தபோது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யூடியூபர் - பதறவைக்கும் வீடியோ

Published On 2025-08-24 20:14 IST   |   Update On 2025-08-24 20:15:00 IST
  • சாகர் டுடு தனது நண்பர்களுடன் ஜெபூரில் உள்ள பிரபலமான டுடுமா நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளார்.
  • அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, சாகர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த யூடியூபர் சாஹர் டுடூ (22). தனது சேனலுக்காக சாகர் டுடு தனது நண்பர்களுடன் ஜெபூரில் உள்ள பிரபலமான டுடுமா அருவிக்கு சென்றுள்ளார்.

அதன் இயற்கை அழகையும் அருவியையும் தனது கேமராவில் படம்பிடிக்க எத்தனித்த சாகர் தண்ணீரில் இறங்கியுள்ளார். சில நொடிகளில், மேலே இருந்து நீர் ஓட்டம் திடீரென அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதன் காரணமாக, சாகர் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாமல் தண்ணீரின் நடுவில் சிக்கிக்கொண்டார்.

கரையில் நின்ற நண்பர்கள் அவரைக் கயிறு மூலம் காப்பாற்ற கடுமையாக முயன்றனர். ஆனால் வெள்ளத்தின் தீவிரம் மேலும் அதிகரித்ததால் அவர்களின் முயற்சிகள் வீணாகின.

அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, சாகர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார். தகவலறிந்து வந்த காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் சாகரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சாஹர் வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

Tags:    

Similar News