இந்தியா
null

இனி இந்த வகை வீடியோக்களுக்கு பணம் கிடைக்காது.. சேனல்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்த யூடியூப்

Published On 2025-07-11 19:15 IST   |   Update On 2025-07-11 19:32:00 IST
  • பதிவேற்றம் செய்யும் வீடியோக்களுக்கு பணம் வழங்குவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
  • இந்த மற்றம் ஜூலை 15 முதல் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

யூடியூப் சேனல்கள் மூலம் பலர் அதிகளவு பணம் ஈட்டி வரும் நிலையில் அந்நிறுவனம் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.

யூடிட்யூப் சேனல்கள் பதிவேற்றம் செய்யும் வீடியோக்களுக்கு பணம் வழங்குவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மீண்டும் மீண்டும் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்கள், ஒரு வீடியோ போலவே உருவாக்கப்பட்ட மற்றொரு வீடியோ, செயற்கை நுண்ணறிவை பயனப்டுத்தி உருவாக்கப்படும் வீடியோக்கள், மிகக்குறைந்த முயற்சியில் உருவாக்கப்பட்ட வீடியோக்கள், மற்றவர்களின் வீடியோவை காப்பியடித்து சில திருத்தங்கள் மட்டும் செய்து உருவாக்கப்பட்ட வீடியோக்கள், தரம் குறைந்த வீடியோக்கள், டெம்ளேட் மாடல் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் ஆகியவற்றுக்கு பணம் வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மற்றம் ஜூலை 15 முதல் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News