இந்தியா
இரவில் இளம்பெண்களை வழிமறித்து தாக்கிய இளைஞர்கள்.. விரலை கடித்து துன்புறுத்தல் - வீடியோ
- இளைஞர்கள் அவர்களை வழியில் தடுத்து நிறுத்தி அடித்துத் துன்புறுத்தத் தொடங்கினர்
- தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் இளம் பெண்ணின் விரலைக் கடித்தார்.
சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் பிறந்தநாள் விழாவை முடித்துவிட்டு வீடு திரும்பும் இளம்பெண்களை இளைஞர்கள் கொடூரமாக தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த வியாழக்கிழமை இரவு ராய்ப்பூரில் விழா முடிந்து திரும்பியபோது சில இளைஞர்கள் அவர்களை வழியில் தடுத்து நிறுத்தி அடித்துத் துன்புறுத்தத் தொடங்கினர். தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் இளம் பெண்ணின் விரலைக் கடித்தார்.
வைரலாகி வரும் வீடியோவின் அடிப்படையில், இந்த சம்பவத்தை காவல்துறையினர் தானாக முன்வந்து எடுத்துள்ளதாக ராய்ப்பூர் காவல் கண்காணிப்பாளர் (SP) உமேத் சிங் தெரிவித்தார். தாக்குதல் நடத்தியவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும், இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக எஸ்பி தெரிவித்தார்.