இந்தியா

விசாரணையே இல்லாமல் ஆண்டுக்கணக்கில் சிறை.. அமலாக்கத்துறை நேர்மையின்றி செயல்பட கூடாது - சுப்ரீம் கோர்ட்டு

Published On 2025-08-07 19:13 IST   |   Update On 2025-08-07 19:35:00 IST
  • அமலாக்கத்துறை குற்றவாளியை போல செயல்படக்கூடாது. சட்டத்தின்படிதான் செயல்பட வேண்டும்.
  • விடுவிக்கப்பட்டவர்கள் இழந்த வருடங்களுக்கு யார் பொறுப்பு?

அமலாக்கத்துறையின் (ED) செயல்பாடுகள் குறித்து உச்ச நீதிமன்றம் கடுமையான விமர்சித்துள்ளது.

வழக்கு ஒன்றில் 2022இல் வழங்கப்பட்ட தீர்ப்பின் மறுசீராய்வு மனுக்களை இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த், உஜ்ஜல் புயன் மற்றும் என்.கே. சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

அப்போது பேசிய நீதிபதிகள், "அமலாக்கத்துறை நேராமையின்றி செயல்படக்கூடாது. சட்டத்தின்படிதான் செயல்பட வேண்டும்.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் பதிவு செய்யப்பட்ட 5,000க்கும் மேற்பட்ட வழக்குகளில் 10க்கும் குறைவான வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

விசாரணை இல்லாமல் பல ஆண்டுகளாக சிறையில் வைத்திருப்பதில் அமலாக்கத்துறை வெற்றி பெற்றுள்ளது.

இது மக்களின் சுதந்திரம் பற்றியது. அமலாக்கத்துறையின் நற்பெயரைப் பற்றியும் நாங்கள் கவலைப்படுகிறோம். 5-6 ஆண்டுகள் நீதிமன்றக் காவலுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டவர்கள் இழந்த வருடங்களுக்கு யார் பொறுப்பு?

சிறப்பு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள அமலாக்கத்துறை வழக்குகளை விரைவுபடுத்த வேண்டும்" என்று தெரிவித்தார். 

Tags:    

Similar News