இந்தியா

புதிய தலைவருக்கு எதிர்ப்பு: மல்யுத்தத்தை விட்டு விலகிய சாக்ஷி மாலிக்

Published On 2023-12-21 17:19 IST   |   Update On 2023-12-21 17:19:00 IST
  • இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தல் இன்று நடைபெற்றது.
  • இதில் முன்னாள் தலைவரின் உறவினரான சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டார்.

புதுடெல்லி:

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் தலைவரான பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் உறவினரான சஞ்சய் சிங் போட்டியிட்டார். 47 உறுப்பினர்களில் 40 பேர் அவருக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

புதிய தலைவராக தேர்வான சஞ்சய் சிங்குக்கு கடும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியானதும் செய்தியாளர்களைச் சந்தித்த மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் கூறுகையில்,

குற்றம் சுமத்தப்பட்ட பிரிஜ் பூஷன் சிங்கின் நெருங்கிய உறவினரான சஞ்சய் சிங் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை என்னால் ஏற்க முடியாது. எனவே நான் மல்யுத்தத்தில் இருந்து விலகுகிறேன் என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News