முஸ்லீம் பெண்களை அழைத்து வரும் இந்து இளைஞர்களுக்கு வேலை தருவோம் - வெறுப்பை கக்கிய பாஜக தலைவர்
- மதமாற்றத்தை தூண்டும் வகையில் அவரின் பேச்சு அமைந்துள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
- உத்தரப் பிரதேச காவல்துறை முஸ்லிம்கள் மீது அற்பமான காரணங்களுக்காக வழக்குப் பதிவு செய்து, இந்துத் தலைவர்கள் வன்முறையைத் தூண்டும்போது அதை மறைக்கும் இரட்டை நிலைப்பாடு இருக்கக்கூடாது.
உத்தரபிரதேசத்தில் பாஜக முன்னாள் எம்எல்ஏ ஒருவரின் வெறுப்பு பேச்சின் வீடியோ வைரலாகி வருகிறது.
டோமரியாகஞ்சில் ஒரு கூட்டத்தில் பேசிய பாஜகவின் முன்னாள் எம்எல்ஏ ராகவேந்திர பிரதாப் சிங், "ஒரு முஸ்லிம் பெண்களை அழைத்து வரும் இந்து பையன்களுக்கு நாங்கள் ஒரு வேலையை ஏற்பாடு செய்வோம்" என்று பேசியுள்ளார்.
மதமாற்றத்தை தூண்டும் வகையில் அவரின் பேச்சு அமைந்துள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "ஒரு தலைவர் கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்றத்தை வெளிப்படையாகத் தூண்டினால், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
உத்தரப் பிரதேச காவல்துறை முஸ்லிம்கள் மீது அற்பமான காரணங்களுக்காக வழக்குப் பதிவு செய்து, இந்துத் தலைவர்கள் வன்முறையைத் தூண்டும்போது அதை மறைக்கும் இரட்டை நிலைப்பாடு இருக்கக்கூடாது.
அவர் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். இல்லையெனில், அனைவருக்கும் சமமான சட்டம் என்ற வாதம் வெற்றுத்தனமாகிவிடும்" என்று குறிப்பிட்டுள்ளார்.