இந்தியா

ஆட்கொல்லி புலி தாக்கி உயிரிழந்த ராதாவின் குடும்பத்தினரை சந்தித்தார் பிரியங்கா காந்தி

Published On 2025-01-28 14:40 IST   |   Update On 2025-01-28 14:40:00 IST
  • 7 வயது பெண் புலியான அது எப்படி இறந்தது? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
  • சாலை மார்க்கமாக மானந்தவாடிக்கு சென்றார்.

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 24-ந்தேதி ராதா என்பவரை புலி தாக்கி கொன்றது. இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அந்த ஆட்கொல்லி புலியை சுட்டுப்பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் பெண்ணை கொன்ற ஆட்கொல்லி நேற்று இறந்து கிடந்தது. 7 வயது பெண் புலியான அது எப்படி இறந்தது? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் புலி தாக்கி இறந்த ராதாவின் குடும்பத்தினரை சந்திக்க எம்.பி. பிரியங்கா காந்தி இன்று வயநாட்டிற்கு வருகை தந்தார். டெல்லியில் இருந்து விமானம் மூலமாக கேரளா கண்ணூர் சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த பிரியங்கா காந்தி, சாலை மார்க்கமாக மானந்தவாடிக்கு சென்றார். அங்கு அவர் புலி தாக்கி பலியான ராதாவின் வீட்டுக்கு சென்று, அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

இந்த சந்திப்புக்கு பின்பு கல்பெட்டாவில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்திலும் பிரியங்கா காந்தி பங்கேற்கிறார்.

அதன்பிறகு மேப்பாடியில் நடக்கும் பொதுக்கூட்டத்திலும் பிரியங்காகாந்தி பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு விமான நிலையத்துக்கு வந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.





Tags:    

Similar News