இந்தியா

VIDEO: கேரள உள்ளாட்சி தேர்தல்.. சபதத்தில் தோற்றதால் சொன்னபடி மீசையை எடுத்த இடதுசாரி தொண்டர்

Published On 2025-12-14 12:58 IST   |   Update On 2025-12-14 12:58:00 IST
  • "நகராட்சியில் LDF தோல்வியடைந்தால், நான் என் மீசையை மழித்துவிடுவேன்" என்று தேர்தலுக்கு முன்பு சபதம் எடுத்தார்.
  • முந்தைய தேர்தல்களில் 12 இடங்களை வென்ற LDF, இந்த முறை ஐந்து இடங்களில் மட்டுமே வென்றது.

கேரளாவில் நடைபெற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. 6 மாநகராட்சிகளில் 4 இல் காங்கிரஸ் கூட்டணி வென்றுள்ளது. 

மேலும் நகராட்சிகளிலிலும் காங்கிரஸ் கூட்டணி (UDF) கணிசமான இடங்களை கைப்பற்றியது. அதற்கு அடுத்தபடியாக ஆளும் இடது ஜனநாயக முன்னணி (LDF) அதிக இடங்களில் வென்றுள்ளது. பாஜக திருவனநாதபுரத்தில் வெற்றியை பதிவு செய்துள்ளது.

LDF கணிசமான இடங்களில் வென்றாலும் காங்கிரஸ் கூட்டணியை விட பின்தங்கியது பேசுபொருளாகி வருகிறது.

இந்நிலையில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் இடது முன்னணி LDF தொண்டர் ஒருவர் தனது மீசையை சிரைத்துள்ளார்.

"நகராட்சியில் LDF தோல்வியடைந்தால், நான் என் மீசையை மழித்துவிடுவேன்" என்று தேர்தலுக்கு முன்பு பகிரங்கமாகக் கூறிய பாபு வர்கீஸ், முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு கூறியது போல் தனது மீசையை மழித்துக் கொண்டார்.

பத்தனம்திட்டா மாவட்ட பஞ்சாயத்தில் உள்ள 16 இடங்களில் 12 இடங்களை வென்றதன் மூலம் காங்கிரசின் UDF பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.

முந்தைய தேர்தல்களில் 12 இடங்களை வென்ற LDF, இந்த முறை ஐந்து இடங்களில் மட்டுமே வென்றது.

கூடுதலாக, UDF 34 கிராம பஞ்சாயத்துகள் மற்றும் ஏழு தொகுதி பஞ்சாயத்துகளில் பெரும்பான்மையைப் பெற்றது.

Tags:    

Similar News