இந்தியா
உத்தரபிரதேசத்தில் விபத்து- கால்வாயில் கார் பாய்ந்து 11 பேர் பலி
- டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த கால்வாயில் தலை குப்புற பாய்ந்தது.
- விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் காரில் கோவிலுக்கு சென்றனர். காரில் 15 பேர் பயணம் செய்தனர். சாமி தரிசனம் செய்து விட்டு அவர்கள் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த கால்வாயில் தலை குப்புற பாய்ந்தது. இந்த விபத்தில் 11 பேர் பரிதாபமாக இறந்தனர். 4 பேர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்கைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.