இந்தியா

யோகேந்திர உபாத்யாய்

மூடப்பட்டிருந்த கல்லூரி கேட்...வெறுப்படைந்து திரும்பிய அமைச்சர்

Published On 2022-08-21 00:43 GMT   |   Update On 2022-08-21 00:51 GMT
  • இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த கல்லூரி நிர்வாகம் உத்தரவு.
  • கண்காட்சிக்கு ஏற்பாடு செய்த ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது.

ஆக்ரா:

உத்தரபிரதேச மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் யோகேந்திர உபாத்யாய், ஆக்ரா கல்லூரியில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தார்.

இதையடுத்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவர் சென்ற போது கல்லூர் கேட் மூடப்பட்டிருந்தது. கல்லூரி வாசலில் அமைச்சர் 15 நிமிடங்கள் காத்திருந்தார். எனினும் கேட் திறக்கப்படாததால் வெறுப்படைந்த அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் திரும்பிச் சென்றார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரணை நடத்த கல்லூரி நிர்வாகம் உத்தர விட்டுள்ளதுடன், கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்த ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டுள்ளது.

ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் கல்லூரி ஓவியத்துறை ஆசிரியர்களால் தனியாக இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக கல்லூரி முதல்வர் அனுராக் சுக்லா தெரிவித்தார். தேர்வு நடைபெற்று வந்ததன் காரணமாக கல்லூரி வளாகத்தில் வாகனங்கள் அதிக அளவில் இருந்ததாகவும், குளறுபடிகள் குறித்து விசாரிக்க குழு அமைத்துள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News