விடுதலை... விடுதலை... சிறை முன்பு நடனம் ஆடிய வாலிபர்- வீடியோ
- உடலை வளைத்து நெளித்து 'பிரேக் டான்ஸ்' ஆடிய அவரை சுற்றி நின்று சில போலீஸ்காரர்களும், வக்கீல்களும் வேடிக்கை பார்த்தனர்.
- ஒரு சிலர் அவருடைய கொண்டாட்டத்தை வரவேற்று உற்சாகப்படுத்தினர்.
உத்தரபிரதேசத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு வழக்கு ஒன்றில் கைதானார். தண்டனையாக அந்த வாலிபருக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தை கட்ட தவறினால் 9 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என கூறப்பட்டநிலையில் அபராதத்தை செலுத்துவதை தவிர்த்து சிறை தண்டனையை அந்த வாலிபர் ஏற்றுக் கொண்டார்.
இதனையடுத்து அந்த வாலிபா் கன்னாஜ் நகர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 9 மாத சிறை தண்டனைக்கு பிறகு அவர் விடுதலையாகி வெளியே வந்தாா். அப்போது விடுதலையை அந்த வாலிபர் நடனமாடி சந்தோசமாக கொண்டாடினார். உடலை வளைத்து நெளித்து 'பிரேக் டான்ஸ்' ஆடிய அவரை சுற்றி நின்று சில போலீஸ்காரர்களும், வக்கீல்களும் வேடிக்கை பார்த்தனர். ஒரு சிலர் அவருடைய கொண்டாட்டத்தை வரவேற்று உற்சாகப்படுத்தினர்.
இதுதொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி ஒரே நாளில் 33 ஆயிரம் பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது.