இந்தியா

மண்டபத்தில் திருமண விழா நடத்தியதற்காக தலித் குடும்பத்தினர் மீது சாதிவெறி கும்பல் தாக்குதல்

Published On 2025-06-01 19:12 IST   |   Update On 2025-06-01 19:12:00 IST
  • திருமண மண்டபத்திற்குள் தடிகளுடன் நுழைந்து அந்த கும்பல் அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியது.
  • அந்த கும்பல் சாதிய அவதூறுகளைப் பேசியது.

தலித் குடும்பம் மண்டபத்தில் திருமணம் நடத்துவதா என கொந்தளித்த சாதிவெறி பிடித்த கும்பல் அவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் ரஸ்ராவில் வெள்ளிக்கிழமை இரவு திருமண மண்டபத்திற்குள் தடிகளுடன் நுழைந்து அந்த கும்பல் அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.

தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மண்டபத்தில் திருமணத்தை நடத்துவீர்களா என்று கேட்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்களின் புகாரில் கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகள் அமன் சாஹ்னி, தீபக் சாஹ்னி, ராகுல் மற்றும் அகிலேஷ் ஆவர். இவர்களைத் தவிர, குற்றம் சாட்டப்பட்டவர்களில் அடையாளம் தெரியாத சுமார் 20 பேர் இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த கும்பல் சாதிய அவதூறுகளைப் பேசி, தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருமண மண்டபத்தை விழாவிற்குப் பயன்படுத்துவதை எதிர்த்துள்ளது.

அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை நடந்து வருவதாக ரஸ்ரா காவல் நிலைய பொறுப்பாளர் விபின் சிங் தெரிவித்தார். 

Tags:    

Similar News