இந்தியா

மத்திய மந்திரி அனுராக் தாக்கூர்

சிறந்த திரைப்படங்களை எடுக்கும் சூழலை உருவாக்குவதே அரசின் குறிக்கோள்- மத்திய மந்திரி

Published On 2022-11-28 22:15 GMT   |   Update On 2022-11-28 22:15 GMT
  • நுட்பமான சினிமா உலகத்தை மிக அழகாவும், நேர்த்தியாகவும் காட்சிப்படுத்தியது.
  • அனைவரையும் மகிழ்வித்தது மட்டுமல்லாமல் புத்தம் புதிய சிந்தனைகளை வளர்த்துள்ளது.

கோவாவில் நடைபெற்ற 53வது இந்திய சர்வதேச திரைப்பட நிறைவு விழாவில் உரை ஆற்றிய மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளதாவது:

திரைப்பட திருவிழா, வயது வித்தியாசம் இன்றி இளைஞர்கள், பெரியவர்கள், புதியவர்கள் மற்றும் ஜாம்பவான்கள் போன்றவர்களுக்கு நுட்பமான சினிமா உலகத்தை மிக அழகாவும், நேர்த்தியாகவும் காட்சிப்படுத்தியது. அனைவரையும் மகிழ்வித்தது மட்டுமல்லாமல் புத்தம் புதிய சிந்தனைகளை வளர்த்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள படைப்பாற்றல் சிந்தனையாளர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள், சினிமா ஆர்வலர்கள் மற்றும் கலாச்சார ஆர்வலர்களை ஒரே கூரையின் கீழ் இந்த விழா ஒன்றிணைத்தது. வசுதேவ குடும்பகம் என்ற பன்முகத் தன்மை இந்த விழா மூலம் நிரூபிக்கப்பட்டது.

இந்தியாவில் எப்போதுமே பலவிதமான திறமைகள் உண்டு. தங்கு, தடைகளுமின்றி பார்வையாளர்கள் கண்டு வெற்றியை தீர்மானிக்கும் வாய்ப்பு தேவைப்பட்டது .பிராந்திய மொழி சினிமாவுக்கு தேசிய மற்றும் சர்வதேச அளவில் வலுவான முக்கியத்துவம் அளித்து, அதன் வளர்ச்சிக்கு ஒரு சிறந்த தளத்தை வழங்கினோம்.

இந்தியாவில் மிகச்சிறந்த திரைப்படங்களை எடுக்கும் சூழலை உருவாக்குவதே எங்கள் குறிக்கோள். பிரதமர் மோடியின் தலைமையிலான அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும். திரைப்படத் தயாரிப்பில் இஸ்ரேலுடன் இணைந்து இந்தியா பணியாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறுஅவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News