இந்தியா

குடும்ப தகராறில் மனைவியை கொன்று போலீஸ் நிலையத்தில் சரணடைந்த கணவர்

Published On 2025-02-12 08:52 IST   |   Update On 2025-02-12 08:52:00 IST
  • ஆத்திரமடைந்த ஷியாமல் தாஸ் மனைவியை வீட்டில் இருந்த கூர்மையான ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.
  • சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஸ்வப்னா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திரிபுராவில் குடும்ப தகராறில் மனைவியைக் கொன்று இரவு முழுவதும் சடலத்துடன் தங்கி இருந்து மறுநாள் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை இரவு 40 வயதான ஷியாமல் தாசு என்பவருக்கும் மனைவி ஸ்வப்னாவுக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஷியாமல் தாஸ் மனைவியை வீட்டில் இருந்த கூர்மையான ஆயுதத்தால் தாக்கியுள்ளார். இதில் ஸ்வப்னா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை அடுத்து செய்வதறியாது ஷியாமல் இரவு முழுவதும் மனைவியின் சடலத்துடன் தங்கினார்.

இதனை தொடர்ந்து நேற்று மதியம் மேற்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ள அம்தாலி காவல் நிலையத்திற்கு சென்ற ஷியாமல் தாஸ் நடந்த சம்பவத்தை போலீசாரிடம் கூறி சரணடைந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஸ்வப்னா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Tags:    

Similar News