இந்தியா

உத்தரபிரதேசத்தில் ரெயில் மோதி 2 ஊழியர்கள் உயிரிழப்பு

Published On 2023-12-02 08:56 IST   |   Update On 2023-12-02 08:56:00 IST
  • சிக்னல் கோளாறை சரி செய்யும் பணியில் 3 ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
  • திடீரென அங்குள்ள 2 தண்டவாளத்திலும் எதிரெதிரே 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வந்து கொண்டிருந்தன.

பாரபங்கி:

உத்தரபிரதேசத்தின் பாரபங்கி மாவட்டத்தின் ஜகாங்கிராபாத் ரெயில் நிலையம் அருகே சிக்னல் கோளாறு ஏற்பட்டிருந்தது. இதை சரி செய்யும் பணியில் 3 ஊழியர்கள் நேற்று முன்தினம் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென அங்குள்ள 2 தண்டவாளத்திலும் எதிரெதிரே 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வந்து கொண்டிருந்தன. இதனால் அவர்களுக்கு தப்பிக்க முடியவில்லை. இதில் கண்ணிமைக்கும் நேரத்தில் 3 ஊழியர்கள் மீதும் ரெயில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

காயமடைந்த மற்ற இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மற்றொரு ஊழியரும் பலியானார். ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உத்தரபிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News