கிணற்றில் குதித்த பெண்ணை காப்பாற்ற முயன்றபோது சோகம் - தீயணைப்பு வீரர் உட்பட 3 பேர் பலி
- அர்ச்சனா என்ற பெண் கிணற்றில் குதித்ததாகக் கொட்டாரக்கரை தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் கிடைத்தது.
- கிணற்றுக்கு அருகில் நின்று கொண்டிருந்த சிவகிருஷ்ணனும் தடுப்புச் சுவர் இடிந்ததால் உள்ளே விழுந்தார்.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் நெடுவத்தூரில், கிணற்றில் குதித்த ஒரு பெண்ணை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர் உட்பட மூன்று பேர் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
நேற்று, அர்ச்சனா என்ற பெண் கிணற்றில் குதித்ததாகக் கொட்டாரக்கரை தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் கிடைத்தது.
மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சுமார் 80 அடி ஆழம் கொண்ட அந்தக் கிணற்றுக்குள் தீயணைப்பு அதிகாரி சோனி எஸ். குமார் இறங்கினார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக கிணற்றின் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது.
இடிபாடுகள் கிணற்றுக்குள் இருந்த சோனி எஸ். குமார் மற்றும் அர்ச்சனா மீது விழுந்தது. மேலும், கிணற்றுக்கு அருகில் நின்று கொண்டிருந்த சிவகிருஷ்ணனும் தடுப்புச் சுவர் இடிந்ததால் உள்ளே விழுந்தார்.
மற்ற தீயணைப்பு வீரர்கள் உடனடியாக மூவரையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், பலத்த காயமடைந்த மூவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.