இந்தியாவில் புத்திசாலிகள் நிறைந்திருக்கும் 'டாப்-10' மாநிலங்கள்: முதலிடம் எந்த மாநிலம் தெரியுமா?
- இந்தியாவிற்கு பொருளாதாரத்தை ஈட்டி கொடுக்கும் ஒரு மாநிலமாக இருப்பது மகாராஷ்டிரா.
- பீகாரில் கொஞ்சம் கொஞ்சமாக கல்வியறிவும் எழுத்தறிவும் மேம்பட்டு வருகிறது.
உலக நாடுகளில், மக்கள் தொகை நிறைந்த நாடாகவும், வணிக வளம் மிக்க நாடாகவும் விளங்குகிறது இந்தியா. நம் நாட்டில் மொத்தம் 140 கோடிக்கும் அதிகமானவர்கள் வசித்து வருகின்றனர். மொத்தம் 28 மாநிலங்கள் இருக்கின்றன.
பல மொழி பேசும் மக்கள், பல மதங்கள் என பல்வேறு விஷயங்கள் இருந்த போதிலும், நம் நாடு ஒற்றுமையுடன் பன்முகத்தன்மை கொண்ட நாடாக விளங்குகிறது. இந்த நாட்டில், அதிக புத்திசாலிகள் நிறைந்த மாநிலங்கள் எவை என்பதற்கான பட்டியல் வெளியாகி இருக்கிறது. இதை அந்தந்த மாநில மக்களின் ஐ.கியூ. எனப்படும் புத்திக்கூர்மை (intelligence quotient - I.Q.) அளவை அடிப்படையாக கொண்டு கணக்கிட்டிருக்கிறார்கள். அந்த பட்டியல் இதோ...
1. கேரளா
இந்திய மாநிலங்களில் உயர்ந்த கல்வி அறிவு மற்றும் அறிவாற்றல்மிக்க மக்களை கொண்ட மாநிலமாக இருக்கிறது கேரளா. இங்கு இருப்பவர்களின் சராசரி ஐ.கியூ. 110-112 ஆக இருக்கிறது. இங்கு பள்ளிப்படிப்பு மற்றும் உயர்கல்வி அறிவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
2. டெல்லி
இந்தியாவின் தலைநகர் டெல்லி, அதிக ஐ.கியூ. திறன் கொண்டவர்கள் வசிக்கும் இரண்டாவது மாநிலமாக இருக்கிறது. இங்கு கணக்கிடப்பட்ட சராசரி மதிப்பீட்டின்படி, மக்களின் ஐ.கியூ. 106-109 ஆக இருக்கிறது. இங்கு பயிற்சி படிப்புகளையும், கல்வியறிவையும் எளிதாக அணுக முடியும் என கூறப்படுகிறது. அதே போல இங்கு வசிக்கும் மாணவர்கள் சி.பி.எஸ்.இ. தேர்வில் நன்கு தேர்ச்சி பெறுபவர்களாக இருக்கின்றனர்.
3. தமிழ்நாடு
மத்திய அரசு வைக்கும் போட்டி தேர்வுகள் மற்றும் மாநில தேர்வுகளில் தமிழக மாணவர்கள், சிறப்பாக செயல்படுவதாக ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. இதை வைத்து பார்க்கும் போது நம் மாநில மக்களின் ஐ.கியூ., 103-106 ஆக இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி நம் மாநில மாணவர்கள் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் அதிகமாக கவனம் செலுத்துகிறார்கள். அதேபோல தமிழ்நாடு, அதிக பயிற்சி மையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கொண்ட மாநிலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.
4. மகாராஷ்டிரா
இந்தியாவிற்கு பொருளாதாரத்தை ஈட்டி கொடுக்கும் ஒரு மாநிலமாக இருப்பது, மகாராஷ்டிரா. இங்கிருக்கும் மக்களின் ஐ.கியூ. 102-104 ஆக உள்ளது. இதில் குறிப்பாக மும்பை மற்றும் புனே ஆகிய இடங்களில் இருக்கும் மக்கள், கல்வி அறிவில் சிறந்து விளங்குவதால் இவர்களின் அறிவாற்றலும் மேம்படுகிறது.
5. கர்நாடகா
கர்நாடகா, இந்தியாவின் டெக் நகரங்கள் அதிகம் கொண்ட மாநிலமாக இருக்கிறது. இங்கிருப்பவர்களின் சராசரியான ஐ.கியூ.வானது 102-103 ஆக உள்ளதாக கூறப்படுகிறது. அந்தவகையில் இந்த பட்டியலில் 4-ம் இடம் பிடித்திருக்கும் மகாராஷ்டிரா மாநிலத்துடன் இவர்கள் நேரடியாக போட்டா-போட்டி நடத்துகிறார்கள்.
6. உத்தரபிரதேசம்
இந்தியாவில் அதிகம் மக்கள் தொகை கொண்ட மாநிலமாக இருக்கிறது, உத்தர பிரதேசம். இங்கு வசிக்கும் மக்களின் ஐ.கியூ.வானது, 99 ஆக இருப்பதாக கூறப்படுகிறது. இங்கு கிராமப்புறம், நகர்ப்புறம் என்று இரு பகுதிகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் நகர்ப்புறத்தை சேர்ந்தவர்களை விட கிராமப்புறத்தில் இருப்பவர்களுக்கு கல்வி அறிவு கிடைப்பது கடினமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
7. பஞ்சாப்
பஞ்சாப்பில் இருப்பவர்களின் ஐ.கியூ. சராசரியாக 99 ஆக இருப்பதாக கூறப்படுகிறது. இங்கிருக்கும் பள்ளிகள் அரசு மற்றும் தனியாரை சேர்ந்ததாக இருக்கின்றன. இங்கு பல்வேறு அறிவு சார் நிறுவனங்களும் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
8. பீகார்
பீகாரில் கொஞ்சம் கொஞ்சமாக கல்வியறிவும் எழுத்தறிவும் மேம்பட்டு வருகிறது. இங்கு இருப்பவர்களின் ஐ.கியூ. அளவானது சராசரியாக 98 ஆக இருப்பதாக கூறப்படுகிறது. இருந்தாலும் இங்கு இருக்கும் பலருக்கு பொருளாதார அமைப்பு காரணமாக கல்வி அறிவானது கிடைக்காமல் இருக்கிறது.
9. சண்டிகர்
இந்த மாநிலத்தில் இருப்பவர்களின் ஐ.கியூ. அளவு தோராயமாக 99 ஆக இருப்பதாக கூறப்படுகிறது. இது இந்தியாவின் சிறிய யூனியன் பிரதேசங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
10. குஜராத்
இந்த பத்து மாநிலங்களில், குஜராத் கடைசி இடத்தில் இருக்கிறது. இங்கிருப்பவர்களின் அறிவாற்றல், சராசரியாக ஐ.கியூ. 97 ஆக இருப்பதாக கூறப்படுகிறது. இப்போது அங்கு நடந்து வரும் பொருளாதார வளர்ச்சி மற்றும் கல்வி குறித்த விழிப்புணர்வு அவர்களின் புத்திசாலித்தனத்தை வளர்த்து வருகிறது.