இந்தியா
நாளை பிரதமரை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்?
- டெல்லியில் நாளை நிதி ஆயோக் அமைப்பின் நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
- கூட்டத்தின் இடைவேளையின்போது பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்திப்பார் என தகவல்.
டெல்லி பாரத் மண்டபத்தில் நாளை நிதி ஆயோக் அமைப்பின் நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற உள்ளது
நிதி ஆயோக் அமைப்பின் நிர்வாகக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை டெல்லி சென்றார்.
இந்தநிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மாலை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, பிரதமர் மோடியை நாளை மாலை 4.10 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
நிதி ஆயோக் அமைப்பின் கூட்டத்தின் இடைவேளையின்போது பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்திப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.