இந்தியா

டெல்லியில் காற்று மாசு காரணமாக 2 லட்சம் பேருக்கு சுவாச கோளாறு - மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

Published On 2025-12-05 04:09 IST   |   Update On 2025-12-05 04:09:00 IST
  • மாசுபாட்டின் அளவு அதிகரிப்பது நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்புடன் தொடர்புடையது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் ஏற்கனவே உள்ள நோய்கள் உள்ளவர்களுக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்துகிறது

டெல்லியின் சராசரி காற்றின் தரக் குறியீடு '400' என்ற மோசமான அளவை தாண்டியுள்ளது.

இந்நிலையில் டெல்லியில் அதிகரித்து வரும் மாசுபாடு காரணமாக, 2022 மற்றும் 2024 க்கு இடையில் டெல்லியில் உள்ள ஆறு மருத்துவமனைகளில் சுமார் 2 லட்சம் சுவாச நோய்கள் பதிவாகியுள்ளதாக மத்திய அரசு பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் கேள்விக்கு பதிலளித்த சுகாதாரத் துறை இணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் பதிலளித்தார்.

அவரது பதிலில், அரசு தரவுகளின்படி, டெல்லியில் உள்ள ஆறு பெரிய மருத்துவமனைகள் 2022 ஆம் ஆண்டில் 67,054 சுவாசக் கோளாறுகளையும், 2023 இல் 69,293 மற்றும் 2024 இல் 68,411 சுவாசக் கோளாறுகளையும் பதிவு செய்துள்ளன.

மாசுபாட்டின் அளவு அதிகரிப்பது நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்புடன் தொடர்புடையது. மேலும் ஏற்கனவே உள்ள நோய்கள் உள்ளவர்களுக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்துகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே நேற்று பாரளுமன்றத்தில் டெல்லி மாசுபாடு குறித்து நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சி எம்.பிக்கள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.  

Tags:    

Similar News