இந்தியா
கேரளாவில் குழிக்குள் விழுந்த நாய் மற்றும் புலியை பத்திரமாக மீட்ட வனத்துறையினர்
- நாயை துரத்திச் சென்றபோது புலியும் குழிக்குள் விழுந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
- புலியை பிடித்த வனத்துறையினர் பெரியார் புலிகள் காப்பகத்திற்கு கொண்டு சென்றனர்.
கேரளா மாநிலம் மயிலாடும்பாறை அருகே விவசாயத் தோட்டத்தில் இருந்த 8 அடி ஆழமான குழிக்குள் ஒரு புலி மற்றும் நாய் தவறி விழுந்துள்ளது.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் நாய் மற்றும் புலியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
புலியை பிடித்த வனத்துறையினர் பெரியார் புலிகள் காப்பகத்திற்கு கொண்டு சென்றனர். நாயை துரத்திச் சென்றபோது புலியும் குழிக்குள் விழுந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.