தமிழ்நாடு செய்திகள்
null

"எனக்கு பல கோடி ரூபாய் கொடுக்க முன்வந்தனர்.." அன்புமணி ராமதாஸ் பரபரப்பு பேச்சு

Published On 2025-06-17 22:35 IST   |   Update On 2025-06-17 22:35:00 IST
  • எனக்கு பணம் முக்கியமல்ல; கட்சிதான் முக்கியம்.
  • திமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு கிடையாது.

தமிழ்நாட்டில் குட்கா புழங்குவது பற்றி திமுக, அதிமுக மாறி மாறி குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் பாமகவின் அன்புமணி ராமதாஸ் பரபரப்பு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்ட பாமக பொதுக்குழுவில் உரையாற்றிய அவர், "குட்கா உள்ளிட்டவை பற்றி பேசாமல் இருக்க பல கோடி ரூபாய் தர முன்வந்தனர்; எனக்கு பணம் முக்கியமல்ல; கட்சிதான் முக்கியம். திமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு கிடையாது. லஞ்சம், ஊழல் பெருக்கெடுத்து ஓடுகிறது. பகல் நேரத்தில் கூட பெண்கள் நிம்மதியாக சாலையில் நடந்து போக முடியவில்லை. தமிழ்நாட்டில் பாதுகாப்பே இல்லை.

பாமகவை பலவீனப்படுத்த வேண்டும் என்பதே திமுகவின் நோக்கம். திமுக பாமகவுக்கு துரோகம் செய்தது. பாமகவுக்கு எதிராக சூழ்ச்சி செய்கிறது. திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதற்காகவே நடைபயணம் மேற்கொள்ளவுள்ளேன்" என்று பேசியுள்ளார்.

அன்புமணி ராமதாஸின் கருத்து அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி வருகிறது. 

Tags:    

Similar News