இந்தியா
null

தமிழகம் உட்பட தேர்தலை எதிர்கொள்ளும் மாநிலங்களுக்கு தேர்தல் பார்வையாளர்களை நியமித்த காங்கிரஸ்

Published On 2026-01-08 07:12 IST   |   Update On 2026-01-08 07:15:00 IST
  • தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு முகுல் வாஸ்னிக், உத்தம் குமார் ரெட்டி மற்றும் காஜி முகமது நிஜாமுதீன் ஆகிய 3 பேர் நியமிக்கப்பட்டனர்.
  • மேற்கு வங்கத்திற்கு சுதீப் ராய் பர்மன் மற்றும் ஷகீல் அகமது கான் ஆகிய 2 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

எதிர்வரும் சட்டசபை தேர்தல்களை முன்னிட்டு அந்தந்த மாநிலங்களுக்கான தேர்தல் பார்வையாளர்கள் அடங்கிய குழுவை காங்கிரஸ் அறிவித்துள்ளது.

அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு முகுல் வாஸ்னிக், உத்தம் குமார் ரெட்டி மற்றும் காஜி முகமது நிஜாமுதீன் ஆகிய 3 பேர் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவுக்கு சச்சின் பைலட், கே.ஜே. ஜார்ஜ், இம்ரான் பிரதாப்கார்ஹி மற்றும் கன்னையா குமார் ஆகிய 4 பேரும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

மேற்கு வங்கத்திற்கு சுதீப் ராய் பர்மன் மற்றும் ஷகீல் அகமது கான் ஆகிய 2 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அசாம் மாநில தேர்தல் பார்வையாளர்களாக பூபேஷ் பாகல், டி.கே. சிவக்குமார் மற்றும் பந்து திர்கே ஆகிய 3 பேர் நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் அந்தந்த மாநிலங்களின் தேர்தல் நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவர்.   

Tags:    

Similar News