இந்தியா

3 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி என்கவுண்டரில் கொலை

Published On 2025-06-06 17:12 IST   |   Update On 2025-06-06 17:12:00 IST
  • மெட்ரோ பகுதிக்கு அருகிலுள்ள ஒரு பாலத்தின் கீழ் தனது தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை கடத்தினார்.
  • சிறுமியின் நிலை இன்னும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் மூன்று வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

வியாழக்கிழமை அதிகாலையில், பரபரப்பான ஐஎஸ்பிடி மற்றும் மெட்ரோ பகுதிக்கு அருகிலுள்ள ஒரு பாலத்தின் கீழ் தனது தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை தீபக் வர்மா என்பவர் கடத்திச் சென்றார்.

அதிகாலையில் எழுந்த குடும்பத்தினர் சிறுமியைக் காணாததால் கவலையடைந்தனர். பின்னர், ஒரு வழிப்போக்கர் சிறுமி கடத்தப்பட்ட இடத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் பலத்த காயங்களுடன் கிடப்பதைக் கண்டு காவல்துறைக்கு தகவல் அளித்தார்.

மருத்துவ பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார். சிறுமி தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நிலை இன்னும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்ய போலீஸ் ஐந்து சிறப்பு குழுக்களை அமைத்தது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளி தீபக் வர்மா அடையாளம் காணப்பட்டார்.

தீபக் இருக்குமிடைமறிந்து அங்கு சென்ற போலீஸ் சரணடையுமாறு போலீசார் எச்சரித்தனர். அப்போது தீபக் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. தற்காப்புக்காக போலீசார் திருப்பிச் சுட்டனர். துப்பாக்கிச் சூட்டில் வர்மா பலத்த காயமடைந்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

Tags:    

Similar News