இந்தியா

ஒரு நாள் சுகம், நிர்வாண படத்தால் ரூ. 4 கோடியை இழந்த வங்கி உயர்அதிகாரி: 108 முறை மிரட்டி பறித்த கில்லாடி பெண்

Published On 2024-06-21 17:13 IST   |   Update On 2024-06-21 17:13:00 IST
  • வங்கியில் லோன் கேட்டு சென்றபோது ஆவணங்கள் முழுமையாக இல்லை.
  • வீட்டிற்கு சென்று ஆய்வு செய்தபோது, வங்கி அதிகாரியை மயக்கியுள்ளார்.

கூட்டறவு வங்கியின் முன்னாள் சிஇஓ-விடம் நிர்வாண படத்தை வெளியிடுவேன் என மிரட்ட 108 தவணை முறையில் 4 கோடி ரூபாய் மோடிச செய்த பெண் மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்த செய்தியை விரிவாக பார்ப்போம்.

மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் 66 வயதான முன்னாள் கூட்டணி வங்கி சிஇஓ வசித்து வருகிறார். இவர் வங்கியில் பணி புரிந்தபோது கடந்த 2016-ம் ஆண்டு, பெண் ஒருவர் வடாலா கிளை வங்கிக்கு லோன் தொடர்பாக வந்துள்ளார்.

லோன் தொடர்பான நடைமுறையில் சில ஆவணங்கள் முழுமை பெறாமல் இருந்துள்ளது. மேலும் லோன் தொடர்பாக அந்த பெண்ணின் வீட்டில் ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. அதற்காக வங்கி அதிகாரியான சிஇஓ நேரடியாக அந்த பெண்மணி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த பெண் வலுக்கட்டாயமாக அவருடன் உடல் தொடர்பாக தொடர்பு வைத்துள்ளார். பின்னர் 7300 ரூபாய் தவணையில் 3 லட்சம் ரூபாய் லோன் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு மாதத்திற்குப் பிறகு அந்த பெண் வங்கி அதிகாரியான சிஇஓ-வை மிரட்ட தொடங்கியுள்ளார். வாட்ஸ்அப்பில் தனக்கு அனுப்பிய நிர்வாண படத்தை குடும்பம் மற்றும் அவரை சார்ந்தவருக்கு அனுப்பி விடுவேன். அனுப்பாமல் இருக்க 8 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்தள்ளார். தொடக்கத்தில் கடும் நெருக்கடி காரணமாக 5 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். பின்னர் 2017-ல் இருந்து 2023 வரை 108 தவணையாக 4.39 கோடி ரூபாய் கொடுத்துள்ளார்.

அவரது வீட்டை விற்று, வருங்கால வைத்து நிதியை எடுத்து, பல்வேறு தனிநபர்களிடம் கடன் வாங்கி அதை கொடுத்துள்ளார்.

இறுதியாக 5 லட்சம் ரூபாய் கேட்க காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் ஒரு லட்சம் ரூபாய் அளிப்பதாக கூறுங்கள் என தெரிவிக்க, இறுதியாக ஒரு லட்சம் ரூபாய் தருகிறேன். அதன்பின் தன்னை தொந்தரவு செய்யக்கூடாது என போலீசார் கூறியது போல் தெரிவித்துள்ளார். அதை நம்பி அந்த 45 வயது பெண் வர போலீசார் மடக்கி கைது செய்துள்ளனர்.

ஒருநாள் ஆசை, நிர்வாண படத்தால் 4 கோடி ரூபாயை முன்னாள் வங்கி அதிகாரி இழந்துள்ளார். இது தொடர்பான மிரட்டலுக்கு ஆளாகும்போது உடடியாக தங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என போலீசார் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். ஆனால் தங்களது மானம் பறிபோகிவிடும் என்ற அச்சத்தில் பணத்தை இழந்து வருகிறார்கள்.

Tags:    

Similar News