இந்தியா

தெலுங்கானாவில் பிரசாரத்தின்போது திடீரென பேச்சை நிறுத்திய பிரதமர் மோடி: காரணம் இதுதானாம்...

Published On 2023-11-27 12:55 IST   |   Update On 2023-11-27 12:55:00 IST
  • பிரதமர் மோடி நேற்று தெலுங்கானாவில் பிரசாரம் மேற்கொண்டார்.
  • வருகிற 30-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் தீவிர பிரசாரம்.

ஐந்து மாநில தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி தீவிரமாக ஈடுபட்டு, பா.ஜனதாவுக்கு வாக்கு சேகரித்து வருகிறார். சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மாநிலங்களில் வாக்குப்பதிவு முடிவடைந்து விட்டது.

தெலுங்கானாவில் வருகிற 30-ந்தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதனால் தெலுங்கானாவில் தேசிய தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் பிரதமர் மோடி நேற்று ஐதராபாத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஆயிரக்காணக்கான மக்கள் கூடியிருந்தனர். பிரதமர் மோடியை பார்ப்பதற்காக பல இளைஞர்கள் டவர் போன்ற கட்டமைப்புகள் மீது ஏறி பிரதமர் பேச்சை கேட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது பிரதமர் மோடி இதை கவனித்துக் கொண்டார். இளைஞர்கள் திடீரென கோபுரத்தில் இருந்து கீழே விழுந்தால் என்னவாகும்? என கவலையை அடைந்தார். இதனால் அவர்கள் கீழே இறங்கும் வகையில் தனது பேச்சை நிறுத்தினார்.

இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு பிரதமர் மோடி "கோபுரத்தில் ஏறியவர்களை சுட்டிக்காட்டி, அவர்களை கீழே இறங்கும்படி கேட்டுக்கொண்டார். நீங்கள் என்னை பார்க்க முடியவில்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அதேவேளையில் நீங்கள் கீழே விழுந்தால் அது என்னை மிகவும் அப்செட் செய்துவிடும். தயது செய்து கீழே இறங்கவும்" எனத் தெரிவித்தார்.

ஒரு சிறுமி தேசியக்கொடியுடன் வந்திருந்தார். அவரை பார்த்து, "ஒரு சிறுமி பாரத மாதவாக வந்திக்கிறார். வீரம்" என்றார்.

இதேபோல் கடந்த 11-ந்தேதி இளம் பெண், மின்னொளிக்காக கட்டப்பட்டிருந்த டவரில் ஏறினார். அவர் பின்னர் கீழே இறக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐந்து மாநில வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் 3-ந்தேதி நடைபெறுகிறது.

Tags:    

Similar News