இந்தியா
தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு
- "சேட்டு (மரம்) ராமையா" , "வனஜீவி" என்று பிரபலமாக அழைக்கப்பட்டார்.
- ஒரு கோடிக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டதற்காக, 2017 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதைப் பெற்றார்.
தெலுங்கானாவை சேர்ந்த பத்மஸ்ரீ விருது பெற்ற 'வனஜீவி' ராமையா இன்று (சனிக்கிழமை) மாரடைப்பால் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அவருக்கு வயது 87.
தெலுங்கானாவின் கம்மம் மாவட்டத்தை சேர்ந்த பசுமைப் போராளி, "சேட்டு (மரம்) ராமையா" ,"வனஜீவி" என்று பிரபலமாக அழைக்கப்படும் தாரிபள்ளி ராமையா கடந்த பல தசாப்தங்களாக ஒரு கோடிக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டதற்காக, 2017 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதைப் பெற்றார்.
இந்நிலையில் கம்மம் மாவட்டத்தில் ரெட்டிபள்ளி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
அவரின் மறைவுக்கு தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரின் மறைவு சுற்றுசூழல் ஆர்வலர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.