இந்தியா

தெலங்கானா: தண்டவாளத்தில் தாறுமாறாக கார் ஓட்டிய பெண் - ரெயில் சேவை பாதிப்பு

Published On 2025-06-26 13:17 IST   |   Update On 2025-06-26 13:17:00 IST
  • உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் ரெயில் தண்டவாளத்தில் கார் ஒட்டி சென்றார்.
  • ரெயில்வே அதிகாரிகள் அந்த காரை துரத்தி சென்றனர்.

தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் ஷங்கர்பள்ளி ரயில்வே கேட் அருகே ரெயில் தண்டவாளத்தில் காரை ஓட்டி சென்ற இளம் பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் ரெயில் தண்டவாளத்தில் கார் ஒட்டியதை கண்ட ரெயில்வே அதிகாரிகள் அந்த காரை துரத்தி சென்றனர்.

அதன் பின் ரயில்வே ஊழியர்கள், பொது மக்களுடன் இணைந்து காரை நிறுத்தி அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் இருந்து வெளியே அழைத்து வந்தனர்.

தண்டவாளத்தில் காட்டிய பெண் குடிபோதையில் உள்ளாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே அவ்வழியே வந்து கொண்டிருந்த பெங்களூரில் இருந்து ஐதராபாத் நோக்கி வந்துகொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயிலின் லோகோ பைலட்டை எச்சரிக்கை செய்து ரெயிலை ரெயில்வே அதிகாரிகள் நடு வழியிலேயே நிறுத்தினர். மேலும் இந்த வழித்தடத்தில் வந்து கொண்டிருந்த 15 ரெயில்கள் திருப்பி விடப்பட்டதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News