இந்தியா

பள்ளி முதல்வரை துப்பாக்கியால் சுட்ட மாணவர் கைது

Published On 2022-09-25 09:59 GMT   |   Update On 2022-09-25 13:02 GMT
  • துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்ட மாணவரை அடையாளம் கண்ட போலீசார் பின்னர் கைது செய்து போலீஸ் காவலில் வைத்துள்ளனர்.
  • படுகாயமடைந்த பள்ளி முதல்வரை லக்னோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

உத்தரப் பிரதேசம் மாநிலம் சீதாபூரைச் சேர்ந்த மாணவர் குரிந்தர் சிங். 12-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில், குரிந்தர் சிங் தான் படிக்கும் பள்ளியில் உடன் படிக்கும் மற்றொரு மாணவரிடையே கடந்த வெள்ளிக்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால், குரிந்தர் சிங்கை அப்பள்ளி முதல்வர் ராம் சிங்மா கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர் குரிந்தர் சிங்கை பழிவாங்கும் நோக்கத்தில் நேற்று ஆதர்ஷ் ராம்ஸ்வரூப் கல்லூரியில் பள்ளி முதல்வரை துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டுள்ளார். இதில் பள்ளி முதல்வர் ராம் சிங் வர்மா படுகாயமடைந்தார்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனை செய்தனர். மேலும் கல்லூரியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்ட மாணவரை அடையாளம் கண்ட போலீசார் பின்னர் கைது செய்து போலீஸ் காவலில் வைத்துள்ளனர்.

மேலும், படுகாயமடைந்த பள்ளி முதல்வரை லக்னோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

Tags:    

Similar News