- அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜாராகவில்லை.
- ராகுல் காந்தி நேரில் ஆஜராக சுல்தான்பூரில் உள்ள மாவட்ட சிவில் கோர்ட்டு சம்மன் அனுப்பி இருந்தது.
சுல்தான்பூர்:
காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி கர்நாடகா தேர்தலின் போது 2018-ம் ஆண்டு பெங்களூரில் நிருபர்களை சந்தித்தார்.
அப்போது அவர் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்து விமர்சித்ததாக பா.ஜனதாவை சேர்ந்த விஜய் மிஸ்ரா 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ந் தேதி வழக்கு தொடர்ந்தார்.
பா.ஜனதா கட்சி நேர்மையான மற்றும் தூய்மையான அரசியலை நம்புவதாக கூறுகிறது. ஆனால் ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் கட்சி தலைவராக இருக்கிறார் என்று ராகுல் காந்தி கூறியதை புகாராக அவர் மனுவில் குறிப்பிட்டார். ராகுல் காந்தியின் இந்த கருத்தை தெரிவித்தபோது அமித்ஷா பா.ஜனதா தலைவராக இருந்தார்.
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜாராகவில்லை.
ராகுல் காந்தி இன்று காலை நேரில் ஆஜராக உத்தரபிரதேசம் மாநிலம் சுல்தான்பூரில் உள்ள மாவட்ட சிவில் கோர்ட்டு சம்மன் அனுப்பி இருந்தது.
இதை தொடர்ந்து ராகுல் காந்தி சுல்தான்பூர் கோர்ட்டில் இன்று ஆஜரானார். அவர் ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து அவர் கோர்ட்டில் இருந்து வெளியேறினார்.
முன்னதாக இந்த வழக்கை தொடர்ந்த பா.ஜனதா பிரமுகர் விஜய் மிஸ்ரா கூறும்போது, 'பா.ஜனதா நாட்டின் மிகப்பெரிய கட்சி. அதன் அப்போதைய தலைவரை கொலைகாரன் என்று அழைப்பது நியாய மற்றது' என்றார்.