இந்தியா

லைவ் அப்டேட்ஸ்- பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்: அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்குவதே அரசின் முக்கிய நோக்கம்- ஜனாதிபதி உரை

Published On 2023-01-31 04:17 GMT   |   Update On 2023-01-31 08:45 GMT
  • திரவுபதி முர்மு ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறக முதல்முறையாக பாராளுமன்றத்தில் உரையாற்றி வருகிறார்.
  • மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்கிறார்.

பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்தாண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் மக்களவை, மாநிலங்களவை என இரண்டு சபைகளின் கூட்டுக் கூட்டம் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடந்து வருகிறது.

இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்தி வருகிறார். திரவுபதி முர்மு ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக பாராளுமன்றத்தில் உரையாற்றுகிறார். இதில், மத்திய அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் இடம்பெறுகின்றன.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்கிறார்.

2023-01-31 06:57 GMT

ஜனநாயகத்தின் மையமான பாராளுமன்றத்தில் நமது செயல்பாடுகள் சிறப்பாக இருக்க வேண்டும். லட்சியத்தை அடைய நாம் ஒன்றோடு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்- ஜனாதிபதி திரவுபதி முர்மு.

2023-01-31 06:55 GMT

நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசு பணியாற்றி வரும் வேகம் அசாதாரணமானது. உலகளவில் நலப்பணிகளை செய்வதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தியாவின் நிலைப்பாட்டை உற்று நோக்கும் உலக நாடுகள்- ஜனாதிபதி திரவுபதி முர்மு.

2023-01-31 06:51 GMT

நாட்டின் விமானப்படை அதி வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. நாட்டின் மிகப்பெரிய ரெயில் நிலையங்கள் நவீனத்துவம் பெறுகின்றன. ரெயில்களை மின்சார ரெயிலாக மாற்றுவதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. கடந்த எட்டு ஆண்டுகளில் நாட்டில் மெட்ரோ கட்டமைப்பு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது- ஜனாதிபதி திரவுபதி முர்மு.

2023-01-31 06:48 GMT

விளையாட்டு துறையில் திறமையாவர்களை ஊக்குவிக்க கேலோ இந்தியா திட்டம். 200 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதிகமான மருத்துவக் கல்லூரிகளால் மருத்துவ படிப்புக்கான இடங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. கிராம மக்களுக்கு வேலை, மருத்துவ வசதி கிடைத்திருப்பதாக உலக வங்கி அமைப்பு தெரிவித்துள்ளது- ஜனாதிபதி திரவுபதி முர்மு.

2023-01-31 06:43 GMT

இந்தியாவின் உற்பத்தி திறன் அதிகரித்து வருகிறது. சுய சார்பு திட்டம் நாட்டு மக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது. உலகம் முழுவதும் உள்ள உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி படையெடுத்து வருகின்றன. புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கிறது அரசு- 81வது இடத்தில் இருந்து 40வது இடத்திற்கு முன்னேற்றம்- ஜனாதிபதி திரவுபதி முர்மு.

2023-01-31 06:37 GMT

நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளின் பெயர்கள் 21 அந்தமான் தீவுகளுக்கு வைக்கப்பட்டது. சுய சார்பு திட்டம் நாட்டு மக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது. அனைத்து விதமான அடிமைத்தனங்களை முற்றிலும் ஒழிக்க முயற்சி- ஜனாதிபதி திரவுபதி முர்மு.

2023-01-31 06:33 GMT

பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ திட்டத்தின் வெற்றியை நாம் அனுபவித்து வருகிறோம். பணிகளில் பெண்களுக்கு எந்தவித கட்டுப்பாடும் இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்தது மத்திய அரசு. நமது மகள், சகோதரிகள் உலக அளவில் பரிசு பெறுவது பெருமைக்குரியது. நமது பாரம்பரியம் ஆகாயத்தை தொடுவதற்கான தைரியத்தை வழங்குகிறது- ஜனாதிபதி திரவுபதி முர்மு.

2023-01-31 06:29 GMT

அரசின் மக்கள் நலன் திட்டங்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக அமைந்துள்ளது. அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்குவதே அரசின் முக்கிய நோக்கம். புதிய வீடுகள் கட்டும்போது அவை பெண்களின் பெயரிலேயே பதிவு செய்யப்படுகின்றன- ஜனாதிபதி திரவுபதி முர்மு.

2023-01-31 06:24 GMT

எல்லை பகுதியில் வசிக்கும் மக்களுக்காக பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. எல்லை பகுதிகளில் நிலவிய நக்சல் இயக்கங்களில் தாக்கம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது- ஜனாதிபதி திரவுபதி முர்மு

2023-01-31 06:22 GMT

மலைவாழ் மக்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நாட்டில் 100க்கும் மேற்பட்ட வளர்ச்சி அடையாத மாவட்டங்கள் இருந்தன. நாட்டில் வளர்ச்சி அடையாமல் இருந்த மாவட்டங்கள் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளன- ஜனாதிபதி திரவுபதி முர்மு.

Tags:    

Similar News