இந்தியா

தேர்தலை மையமாக வைத்து நகரங்களை மேம்படுத்த முடியாது- பிரதமர் மோடி உரை

Published On 2022-09-20 07:17 GMT   |   Update On 2022-09-20 07:17 GMT
  • நம் நாட்டில் மெட்ரோ நெட்வொர்க் 250 கிலோமீட்டருக்கும் குறைவாகவே இருந்தது.
  • நகரங்களில் பழைய கட்டிடங்கள் இடிந்து விழுவதும், கட்டிடங்கள் தீப்பிடிப்பதும் பெரும் கவலையாக உள்ளது.

குஜராத் மாநிலம் காந்தி நகரில் இன்று நாடு முழுவதும் உள்ள பாஜக மேயர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' நிகழ்ச்சியின்போது அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்தியாவின் நகர்ப்புற வளர்ச்சிக்கான சாலை வரைபடத்தை தயாரிப்பதில் இந்த மாநாடு முக்கிய பங்கு வகிக்கிறது.

நமது நாடு பாஜகவை நம்புகிறது. அடிமட்டத்தில் இருந்து பணியாற்றுவது அனைத்து மேயர்களின் பொறுப்பு. சிறந்த வசதிகள் வழங்கப்பட வேண்டும் மற்றும் வளர்ச்சியை நன்கு திட்டமிட வேண்டும்.

தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், தேர்தல் வெற்றியை மட்டுமே நினைக்கக்கூடாது. தேர்தலை மையமாக வைத்து உங்கள் நகரத்தை நீங்கள் மேம்படுத்த முடியாது.

சர்தார் வல்லபாய் படேல், மேயராக தனது பயணத்தை தொடங்கினார். சிறந்த இந்தியாவுக்காக அவருடைய வழியைப் பின்பற்றி அதன் வளர்ச்சிக்காக உழைப்போம். அனைத்து மேயர்களும் அனைவரின் ஒத்துழைப்பு, அனைவரின் முன்னேற்றம், அனைவரின் முயற்சி ஆகியவற்றைப் பின்பற்ற வேண்டும்.

2014 வரை, நம் நாட்டில் மெட்ரோ நெட்வொர்க் 250 கிலோமீட்டருக்கும் குறைவாகவே இருந்தது. இன்று நாட்டில் மெட்ரோ நெட்வொர்க் 775 கிலோமீட்டருக்கும் அதிகமாக உள்ளது. மேலும் 1,000 கிமீ பணிகள் நடைபெற்று வருகின்றன.

நகரங்களில் பழைய கட்டிடங்கள் இடிந்து விழுவதும், கட்டிடங்கள் தீப்பிடிப்பதும் பெரும் கவலையாக உள்ளது. விதிகளை பின்பற்றினால் இதை தவிர்க்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News